கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு, பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு. பொள்ளாச்சி- டிச- 13 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம்பொள்ளாச்சி வனச்சரக பகுதி உட்பட்ட நவமலையாகும், இப்பகுதியில் மின்சாரம் ஊழியர் குடியிருப்பு மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்பு என 300-க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர், மலைவாழ் மக்கள் அன்றாடம் அருகில் உள்ள தோட்டங்களுக்கும் கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர் மேலும் மலைவாழ் மக்கள் குழந்தைகள், மின்சார ஊழியர் குழந்தைகள் ஆழியார் மற்றும் கோட்டூர் பகுதிகளுக்கு பள்ளிக்கு சென்று வருகின்றனர்,தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் அப்பர் ஆளியார்,காடம்பாறை நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகமானதால் தற்போது அப்பர் ஆழியாரில்தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது,இதனால் நவமலைஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியது இதனால் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலையும் , அரசு பேருந்து வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது,தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கோவை… நவமலை ஆற்றில் திடீர் வௌ்ளப்பெருக்கு… போக்குவரத்து துண்டிப்பு…
- by Authour
