கோவை செல்வபுரம் பகுதியில் SDPI யினர் வக்ஃப் திருத்த சட்டம் அமுழுக்கு வருவதற்க்கு முன்பே மக்களிடம் விழிபுணர்வு ஏற்படுத்தியவர்கள் SDPI கட்சியினர்.என்ற அடிப்படையில் தற்போது மத்திய அரசு வக்ஃப் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து தொடர் போராட்டம். நாடு முழுவதும் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் மேற்கு செல்வபுரம் பகுதியில் மெழுகு வர்த்தி ஏந்தி மனித சங்கிலி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி செயலாளர் அப்பாஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார், SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.அப்துல் காதர் அவர்கள் கண்டன உரையாற்றினார், துணைத்தலைவர் இப்ராஹிம்,
பொருளாளர் அஷ்ரப், செயற்குழு உறுப்பினர் அன்வர் உசேன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், வடக்கு தொகுதி தலைவர் NMJ
நாசர், விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட செ உறுப்பினர் அஸ்மா, தலைவர் ஃபர்ஷானா, செயலாளர் நசீரா,
ஐடி விங் அனீஸ்,மற்றும் மமக தமுமுக பகுதி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தை பகுதி நிர்வாகிகள் , SDPI WIM கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் உயர்ந்த கைகள் அறகட்டளையின் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்களது கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். இறுதியாக தொகுதியின் துணைச் செயலாளர் முஸ்தபா நன்றியுரை வழங்கினார்..