கார்த்திகை தீப திருநாளை ஒட்டி கோவையில் உள்ள பல்வேறு சிவன் மற்றும் முருகன் கோவில்களிலும், வீடுகளிலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தையொட்டி, நொய்யல்
அன்னையை போற்றி வணங்கும் வகையில், பேரூர் படித்துறையில் நொய்யல் என்று விளக்குகளால் தீபம் ஏற்றி நொய்யல் அன்னையை போற்றி வணங்கி வருகின்றனர்.
இந்தாண்டு, பேரூர் படித்துறையை தூய்மைப்படுத்தி, நொய்யல் ஆற்றின் பழமை வாய்ந்த பெயரான காஞ்சிமா நதி என்று விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு படித்துறை வண்ணமயமாக ஜொலித்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளக்குகளை நொய்யல் ஆற்றை வரவேற்கும் விதமாக தீபம் ஏற்றியது காண்போரின் கண் கவர செய்தது.