Skip to content

கோவை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்…

  • by Authour

கோவை, மாநகராட்சியின் 2025 – 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. அதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இந்த பட்ஜெட்டை வெளியிட்டார். நிதிக் குழு தலைவர் முபசீரா பட்ஜெட்டைப் பெற்றுக் கொண்டார். இந்த பட்ஜெட்டில் வருவாய் வரவினம் மற்றும் மூலதன வரவினம் 4617.33 கோடி ரூபாயாகவும், வருவாய் செலவினம்

மற்றும் மூலதன செலவினம் 4757.16 கோடி ரூபாயாகவும், நிகர பற்றாக்குறை 139.83 கோடி ரூபாயாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் கணக்காளர்கள் 20 பேருக்கும், பெண்கள் 9 பேருக்கும் பட்ஜெட் தயாரிப்புக்காக பட்டு வேஷ்டி பட்டு சட்டை எடுத்து கொடுக்கப்பட்டதாகவும், மஞ்ச பையில் சுவர் கடிகாரம் வைத்து கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!