கோவை, பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் ஹிந்துஸ்தான் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கும் விடுதியும் செயல்படுகிறது. இந்த பாராமெடிக்கல் அலய்டு சயின்ஸ் கல்லூரியில் திருவண்ணாமலை, பகுதியைச் சேர்ந்த அனுப்பிரியா வயது 18 என்பவர் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ – மாணவிகளுக்கு அங்கு உள்ள மருத்துவமனை 4 – வது கட்டிடத்தில் பயிற்சி நடந்து கொண்டு இருந்தது. மதியம் அனைவரும் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது மாணவ – மாணவிகள் அவர்கள் உடமைகளை பயிற்சி நடந்த வகுப்பறையில் வைத்து விட்டு சென்று உள்ளனர். இதில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி பரிசில் இருந்த பணம் 1500 ரூபாய் திடீரென மாயமானது. உணவு அருந்தி விட்டு வந்த மாணவி பணம் மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து பேராசிரியர்களிடம் கூறி உள்ளார். அப்போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது அனுபிரியா தனியாக அந்த அறையை விட்டு வெளியே வருவது தெரிய வந்தது. இதனால் அந்த மாணவி எடுத்து இருக்கலாம் என பேராசிரியர்கள் சந்தேகப்பட்டு உள்ளனர். உடனே இது குறித்து பாராமெடிக்கல் கல்லூரி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அனுப்பிரியாவை கல்லூரி முதல்வர் உள்ள ஐந்தாவது மாடி கட்டிட அறையில் வைத்து முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் விசாரித்து உள்ளனர். அப்பொழுது சக மாணவர்களும் இருந்து உள்ளனர். மாலை இரண்டு மணி முதல் 4:30 மணி வரை விசாரணை நடந்து உள்ளது. ஆனால் அந்த மாணவி தான் எந்த தவறும் செய்யவில்லை பணம் எடுக்கவில்லை என்று மறுத்து உள்ளார். மற்ற மாணவ – மாணவிகள் வகுப்புகள் முடிந்து விடுதிகளுக்கும், வீடுகளுக்கும் சென்ற நிலையில், அனுபிரியாவை அவர்கள் விடவில்லை என கூறப்படுகிறது.
மாலை ஆறு முப்பது மணி அளவில் அனுப்பிரியாவை ஐந்தாவது மாடியில் இருந்து வீட்டுக்கு செல்லும்படி கூறி அனுப்பி உள்ளனர். இதனால் சோகத்துடன் அவமானம் அடைந்து வெளியேறிய அனுப்பிரியா, நான்காவது தளத்திற்கு வந்தவுடன் திடீரென்று அங்கு இருந்து கீழே குதித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவி மீது திருட்டு பட்டம் சுமத்தியதால் அவர் அவமானம் அடைந்து தற்கொலை செய்த தகவல் சக மாணவ – மாணவிகளுக்கு பரவியது. அவர்கள் சம்பவம் நடந்த இடத்தை முற்றுகையிட்டனர்.
பேராசிரியர்களை வெளியில் செல்ல விடாமல் தடுத்து உள்ளனர். கல்விசு சம்பவம் நடந்தது. இதில் கல்லூரியின் கண்ணாடி உடைந்தது. அதன் பிறகு மாணவி அனுபிரியா உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு இடையே அனுப்பிரியா தற்கொலை செய்த தகவல் திருவண்ணாமலையில் உள்ள மாணவி அனுப்பிரியாவின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. தந்தை இல்லாத நிலையில் ஒரே மகளான அனுப்பிரியா இறந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் வானதி உறவினர்களுடன் கோவைக்கு விரைந்து வந்தார். மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.. இது குறித்து கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் வானதி புகார் செய்தார். இன்று மாணவி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. மாணவி உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் அறை முன்பு அவருடன் படித்த மாணவ – மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ – மாணவிகள் திரண்டு நின்றனர். அவர்கள் மனைவி இறப்புக்கு நியாயம் கேட்டு வருகிறார்கள். இதனால் அங்கே போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை முன்பு கதறி அழுத மாணவ மாணவிகள் , இறந்த மாணவிக்கு நியாயம் கேட்டு போராடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து மாணவியின் பெற்றோரும் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
மருத்துவமனையில் 1,500 ரூபாய் காணவில்லை என அனைத்து மாணவர்களையும் அழைத்து விசாரித்ததாகவும், மாணவியை மட்டும் தனியாக விசாரித்த நிலையில் மாணவி மருத்துவமனையின் 4 வது மாடியில் இருந்து குதித்தாக சொல்வதாகவும் மாணவியின் பெற்றோர் கதறல்.
கல்லூரியில் இருந்து அழைத்து மகள் கீழே விழுந்து விட்டதாக தெரிவித்ததாகவும் இங்கே வந்தவுடன் இறந்து போனது தெரிய வந்ததாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் வலியுறுத்தினர். இச்சம்பவம். குறித்து இந்துஸ்தான் கல்லூரி முதல்வர் மணிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி
நேற்று மாலை மூன்று மணி அளவில் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.
இரண்டு மாணவர்களை மட்டும் விசாரிக்கவில்லை. இன்டென்ஷிப் வந்த பிற மாணவர்கள் மற்றும் கல்லூரியில் வேலை செய்பவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.வழக்கமாக நடத்தப்படக்கூடிய விசாரணை தான் இது.அந்தப் பெண் மாற்றி மாற்றிதான் பேசினார் ஆனால் அதைப் பற்றி நாங்கள் பெரிதாக எதுவும் பேசவில்லை. ஒரு விளக்க கடிதம் மட்டும் மனைவியிடம் கேட்டோம்.பெற்றோரிடம் சொல்வதற்கு வாங்கி வைத்தோம்
சிசிடிவியில் காட்சி தொடர்பாக மருத்துவமனையை சேர்ரந்த பிற துறை ஊழியர்கள் மாணவியிடம் பேசினார்கள். மாணவியை நாங்கள் குற்றவாளி என சொல்லவில்லை. மாணவர்களை நாங்கள் எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்
பெற்றோரிடம் நிலையே தெரிவித்தோம். விசாரணைக்காக அவர்களையும் வர சொல்லியிருந்தோம்.பெற்றோர்களும் விசாரணைக்கு வருவதாக தான் சொல்லி இருந்தார்கள். 6 மணி நேரம் எல்லாம் விசாரிக்கவில்லை. மூன்று மணிக்கு தான் எனக்கு இந்த தகவல் கிடைத்தது
அந்த வகுப்பில் இருக்கிற அனைத்து மாணவர்களையும் அழைத்து ஒரு அறையில் அமர வைத்து விசாரித்தோம். என்னுடைய விசாரணை கிடையாது. மருத்துவமனையில் காணாமல் போனதால் மருத்துவமனை தரப்பில் விசாரித்தார்கள். என்னுடைய மாணவி என்பதால் எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். கல்லூரியில் இருந்து எதுவும் காணாமல் போகவில்லை. நான் அவரிடம் விசாரிக்கவும்
இல்லை. மருத்துவமனை தரப்பில் விசாரித்தார்கள்…