Skip to content

கோவை… பட்டா வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

கோவையில் இ-பட்டா வேறொறுவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால் மூதாட்டி சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி பரபரப்பு !!!

கோவை, செட்டிபாளையம் அண்ணா நகர் பகுதியில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டு பட்டாவும் வழப்க்கப்பட்டது. அப்படி பட்டா பெற்ற ரஜியா பேகம் என்பவர் அதிகாரிகள் ஆய்விற்கு வரும் போது. சம்பவ இடத்தில் இல்லாததால் ரஜியா பேகத்தின் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்து 14 வது வார்டு தி.மு.க கவுன்சிலர் வேலுமணி என்பவரின் பரிந்துரையின் பேரில் தனலட்சுமி என்பவருக்கு இ-பட்டா வழங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் தகவல் அறிந்த ரஜியா பேகம் தனக்கு ஒதுக்கபட்ட இடத்தில் தகர கொட்டகை அமைத்து உள்ளார். இதனால இ-பட்டா பெற்ற தனலட்சுமி, தி.மு.க கவுன்சிலர் வேலுமணியிடமும், கிராம நிர்வாக அலுவலரிடமும் தகவல் அளித்ததின் பேரில் அதிகாரிகள் ரஜியா பேகம் அமைத்த தகர கொட்டகையை ஜெ.சி.பி இயந்திரம் மூலம் அகற்றி உள்ளனர். இதனால் மனமுடைந்த ரஜியா பேகம் தான் அமைத்த தகர கொட்டகை முன்பாக திடீரென சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ரஜினா பேகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்து உள்ளனர்.

ஒருவருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை முழுமையாக விசாரிக்காமலும், பட்டா பெற்றவரிடம் விசாரிக்காமலும் தி.மு.க கவுன்சிலரின் பரிந்துரையின் பேரில் அவசர கதியில் வேறொருவருக்கு இ-பட்டா வழப்க்கியதால் தற்பொழுது ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!