கோவை, போத்தனூர் சேர்ந்த கேப்ரியல் ஆண்டனி முன்னாள் ராணுவ வீரர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் போத்தனூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதற்கு இடையே அவர் வெங்காயம் விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என ஆசை இருந்ததாகவும், இதற்காக வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து விற்கலாம் என திட்டமிட்டு அதற்கான விவரங்களை youtube மூலம் திரட்டி வந்து உள்ளார்.அப்பொழுது youtube-ல் வெங்காயம் கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக ஒரு வீடியோவை பார்த்து அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதில் அந்த நபர் தான் மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் வசித்து வருவதாகவும் தனது பெயரில் சித்திரைபழம் என்னும் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் தெரிந்த டிரேடிங் நிறுவன மூலம் குறைந்த விலைக்கு வெங்காயம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினார்.
இதனை நம்பிய கேப்ரியல் ஆண்டனி அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூபாய் 15 லட்சம் பணம் அனுப்பி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் கூறிய படி வெங்காயத்தை கொள்முதல் செய்து தரவில்லை, மேலும் அவரை தொடர்பு கொண்ட போது முறையான பதிலளிக்கவில்லை, அவர் பணத்தை திரும்பி தராமல் மோசடி செய்து வந்து உள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மராட்டி மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திரை பழம் என்பவரை கைது செய்தனர்.