கோவை, துடியலூர் கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனித், தனியாக இருக்கும் தனியார் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டப் பகலில் மர்ம நபர்கள் வீடுகளில் இருந்த பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியது. இதனை அடுத்து காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டைக்கு பின்பு பல்வேறு மாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்கள் குறைந்த நிலையில், தற்பொழுது மீண்டும் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளது.