Skip to content

கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த 25 மாணவர்கள் நேற்று இரவு ஆழியார் – வால்பாறை சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இன்று காலை ஆழியார் வந்த அவர்கள், ஆழியார் பாலத்தின் அடியில் குளிப்பதற்காக சென்ற போது எதிர்பாராத விதமாக மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

முதலில் ஆண்ட்ரூ என்ற மாணவன் ஆற்றில் இறங்கிய போது, தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட ரேவன் என்ற மாணவன் அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கினார். இதைக் கண்ட தருண் என்ற மாணவன் அவர்கள் இருவரையும் காப்பாற்ற செல்ல அவரும் மூழ்கி இருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள் கூச்சலிட்டனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் உடனடியாக ஆழியார் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் மூழ்கிய மூவரின் உடல்களையும் மீட்டனர்.
பின்னர், மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ஆழியார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!