தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (7.12.2022) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 19.16 இலட்சம் தென்னங்கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் 2 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, முதன்மைச் செயலாளர் / சர்க்கரைத்துறை ஆணையர் சி.விஜயராஜ் குமார், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சி. சமயமூர்த்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் தெற்கு கடற்படை கமாண்ட், கமாண்டிங்-இன்-சீஃப் பிளாக் ஆபீசர்
வைஸ் அட்மிரல் எம்.ஏ.ஹம்பிஹோலியை சந்தித்துப் பேசினார். உடன் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் கப்பற்படை உயர் அலுவலர்கள் உள்ளனர்.