கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சட்டமன்றத்தில் இன்று கூறியதாவது:
தமிழகத்தில் 2 கோடியே 6 லட்சம் பேர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் போலி உறுப்பினர்களும் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே போலிகள் நீக்கப்பட குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணி முடிந்ததும், நிச்சயமாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறம்.
இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.