முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி, ராஜமூர்த்தி என இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரர் உள்ளனர். மிகவும் ஒற்றுமையாக இருக்கும் 3 பேரும் குடும்ப நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது கோயில் நிகழ்ச்சிகளுக்கு தனது சகோதரிகளுடன் செல்வதை துர்கா ஸ்டாலின் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனிடையே துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி கோவையில் திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டாலும் அவர் சென்னைக்கு குடிபெயர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரது கணவர் தொழிலதிபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வந்த சாருமதி, நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவுச் செய்தியை அறிந்தவுடன் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்ற துர்கா ஸ்டாலின் சாருமதி உடலைப்பார்த்ததும் கதறி அழுதார். முதல்வர் ஸ்டாலில் , அமைச்சர் உதயநிதி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். சாருமதியின் இறுதிச் சடங்கு சென்னையில் இன்று நடைபெறுகிறது.
Tags:துர்கா ஸ்டாலின்