தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றிரவு தனது முகாம் அலுவலகத்திலிருந்து வெள்ள மீட்பு பணிகளை மேற்கொண்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தார். குறிப்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் டாக்டர் நா.எழிலன், இ.கருணாநிதி, இ.பரந்தாமன், எஸ்.அரவிந்த் ரமேஷ் மற்றும் திரு.வி.க.நகர் கண்காணிப்பு அலுவலர் கணேசன் ஆகியோரிடம் வீடியோலில் சென்று.. எங்கே இருக்கிறீர்கள் என்னவேலை நடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேருக்கு உணவு கொடுக்கப்பட்டது என்பது குறித்து கேட்டறிந்தார்..