கோவை தெற்கு மாவட்டம் இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் ஏற்பாட்டில் மாபெரும் பைக் பந்தயம் நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார்,இந்த போட்டியில் தமிழ்நாடு கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பைக் வீரர்கள் கலந்து கொண்டனர்,நான்கு விதமாக போட்டி நடைபெறுகிறது, இதில் குழந்தைகளுக்கு என பைக் பந்தயம் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது மேலும் மாநில அளவிலான போட்டி எனவும் பொது மக்களுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து நடைபெறுகிறது, வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூபாய் 2.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது என போட்டு ஒருங்கிணைப்பாளர்தெரிவித்தார்,இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன்,சட்டத்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ்,பொதுக்குழு உறுப்பினர் அமுத பாரதி,நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே. வி. கே. சபரி கார்த்திகேயன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,பைக்கில் வீரர்கள் சிறி பாய்ந்து சென்றது பார்வையாளர்கள் மத்தியில் பரவசம் ஏற்பட்டது.