முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆகஸ்டு 5ம் தேதி மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமண பள்ளியில் தொடங்கி வைத்தார். பயனாளியின் வீடு தேடி சென்று அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்படுகிறது இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான திருச்சி அருகே உள்ள சன்னாசிப்பட்டி ஊராட்சி மேல தெருவில் வசிக்கும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனாட்சி என்ற 60 வயது பெண்மணிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.