பாராளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 22ம் தேதி முதல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அன்றைய தினம் திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அவர் சிறுகனூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 40 தொகுதிகளையும் 20 நாட்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் இறுதியாக வரும் ஏப்.17ம் தேதி தென் சென்னை மற்றும் மத்திய சென்னை வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டு முடிக்கிறார்.