உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூரில்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டமாசெக், செம்ப்கார்ப், கேப்பிட்டா லேண்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் சிங்கப்பூர் மந்திரி ஈஸ்வரனையும் சந்தித்து பேசினார். அதன் பின்னர் அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இன்று சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்து, ஜப்பான் புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்.