தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைையை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசுஅறிவித்தது. அதைத்தொடர்ந்து மத்திய அரச தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை தர மறுத்து விட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் , மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நதி தரமுடியும், இல்லாவிட்டால் நிதி கிடையாது என திட்டவட்டமாக கூறி விட்டார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
தமிழக மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி, கல்வி நிதி ரூ.2, 152 கோடியை உடனே விடுவித்திடுக. தமிழ்நாட்டின் கல்வி, சமூக சூழலில் இருமொழிக் கொள்கை வேரூன்றி உள்ளது. இரு மொழிக்கொள்கையில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.