காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சோனியா காந்திக்கு இன்று 78வது பிறந்தநாள். இதையொட்டி சோனியாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
இது போல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.அதில், “காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வலிமையான சவால்களை வழிநடத்துவது முதல் கருணையுடன் வழிநடத்துவது வரை, அவரது பயணம் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. அவருக்கு வெற்றியும் அமைதியும் நிறைந்த நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.