அமைச்சர் கே. என். நேருவின் மகனும், தொழிலதிபருமான கே. என். அருண் நேரு, தனது பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நேற்று வாழ்த்து பெற்றார். சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு சென்று முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி ஆசி பெற்ற அருண் நேருவுக்கு, முதல்வரும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், அமைச்சர் நேருவின் சகோதரரும், டிவிஎச் நிறுவன செயல் தலைவருமான ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
