Skip to content

கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு    பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவிர  அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில  திமுக, காங்கிரஸ்,   விசிக, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள்  அனைத்தும் கடும்  எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில்  திமுக, மற்றும் திமுக  கூட்டணி கட்சியினர் அனைவரும்  கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.   முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரும் கருப்பு பேட்ஸ் அணிந்திருந்தனர்.

சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், தாங்கள் ஏன் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருக்கிறோம் என  முதல்வர் விளக்கம் அளித்தார்.  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  வக்பு வாரிய  மசோதாவை எதிர்த்து  வழக்க தொடர்வோம் என்று முதல்வர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து  அனைத்து கட்சியினரும் இது குறித்து பேசினர். முதலில் தவாக தலைவர் வேல்முருகன் இதனை தொடங்கி வைத்து பேசினார்.

error: Content is protected !!