தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள வணிகர் பெருமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், வணிகவரித் துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் மேல்முறையீடுகள் குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரி நிலுவைத் தொகை சமாதானத் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு வரி நிலுவை ரத்துக்கான சான்றிதழ்களை வழங்கினார். உடன் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வணிகவரி ஆணையர் / முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா ஆகியோர் உள்ளனர்.
Tags:முதல்வர் ஸ்டாலின்