100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப்பணி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்… “திருவண்ணாமலையில் ரூ.10 கோடியில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும். விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கத்திலேயே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது.”என்று இவ்வாறு தெரிவித்தார்.
