Skip to content
Home » மன்மோகன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மன்மோகன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

முன்னாள்  பிரதமர்  மன்மோகன்சிங் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. மன்மோகன் உடலுக்கு  ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,  ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்கள், மத்திய அமைச்சர்கள்  அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் டில்லி சென்று  மன்மோகன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து  திமுக எம்.பிக்கள் கனிமொழி, டிஆர் பாலு,  திருச்சி சிவா,  தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.