Skip to content

முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்…. நிகழ்ச்சி முழு வவிரம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு  செல்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள சேலம், பழைய பேருந்து நிலையத்தினை அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார். சேலம் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம், அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டடம், சீர்மிகு நகரத் திட்டம், மறு சீரமைப்புப் பணிகள், பள்ளப்பட்டி ஏரி புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய பாலப் பணிகள் உட்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளைத் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து 12-ந்தேதி காலையில் காவிரி டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டத்துக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்க சேலம் மாவட்ட தி.மு.க. வினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!