தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி, மாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சீனியர்ஸ் ரெசிடென்ஸி முதியோர் காப்பகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா கோ. வி. செழியன் ஏற்பாட்டில் 50க்கும் மேற்பட்ட முதியோருக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் சுபா திருநாவுக்கரசு, துணைத்தலைவர்கள் கோ. க. அண்ணாதுரை, பத்மாவதி கிருஷ்ணராஜ், திருவிடைமருதூர் பேரூர் செயலாளர் சுந்தர ஜெயபால், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ராஜா, சரவணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.