தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை , தலைமைச் செயலகத்தில் தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி , பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2023-2024ம் ஆண்டிற்கான கலை மற்றும் பண்பாடு துறை மானியக்கோரிக்கை தன் மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை , தலைமைச் செயலகத்தில் , தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பொதுத்துறை அசெயலாளர் முனைவர் ஜனந்நாதன் ஆகியோர் 2023-2024ம் ஆண்டிற்கான பொதுத்துறை மானியக் கோரிக்கை
மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இதனைதொடர்ந்து முதல்வரிடம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வௌிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 2023-2024ம் ஆண்டிற்கான பொது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு மீதான விவாதத்திற்கு முன்னதாக
சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன், சிறப்புச் செயலாளர் கலைஅரசி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் உள்ளனர்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சந்தித்து, பெரியவர் இளையபெருமாள் சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள்
சிந்தனைச் செல்வன், பாலாஜி , முகம்மது ஷா நவாஸ், விசிக கட்சியின் செயலாளர்கள் உஞ்சையரசன் பாவரசு ஆகியோர் உள்ளனர்.