Skip to content

மதுரை: கம்யூ. மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று காலை துவங்கியது.  திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் நடைபெற்ற பொது மாநாட்டில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சிபிஐ (எம்எல்) பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியா, ஆர்எஸ்பி கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் தேவராஜன், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

2ம் நாள் மாநாடு இன்று மாலை 5 மணிக்கு மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், நடக்கிறது.  மதுரையில் இன்று  பலத்த மழை பெய்ததால்  இன்று மாலை நடைபெறும்  நிகழ்ச்சிகள்  மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்து  ஒரு மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

‘கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் நடக்கும் சிறப்பு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா உள்ளிட்டோர்  பேசுகின்றனர். இதற்காக இன்று மாலை 3.45 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அழகர்கோவில் சாலையிலுள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்ெவடுக்கிறார். இதன்பிறகு அங்கிருந்து மாநாட்டு அரங்கிற்கு செல்கிறார்.

error: Content is protected !!