Skip to content

நிதி நெருக்கடியிலும் மக்கள் மருந்தகங்கள் திறப்பு-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  இன்று முதல்வர் மருந்தகங்கள் திறப்பு  விழா நடந்தது. சென்னையில்  இதனை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின்  பேசினார். அவர் பேசியதாவது:

கல்வியும் மருத்துவம் தான் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கண்.  கலவியில் தமிழ்நாடு சிறந்த மாநிலம், சிறந்த மருத்துவ கட்டமைப்பை  நாம் உருவாக்கி உள்ளோம்.  தலைமை செயலாளர் சொன்னது போல மருந்துகளை குறைந்த விலையில கிடைக்கும் வகையில்  முதல் கட்டமாக 1000   மருந்தகங்கள் திறப்போம்  என அறிவித்தோம். இது இன்று  செயல்படுத்தப்படுகிறது.

சாதாரண, சாமான்ய மக்களின் அரசு என்பதற்கு அடையாளம் தான் இந்த மருந்து கடை திறப்பு.  அதிக விலை கொடுத்து மருந்து வாங்கும் சாதாரண மக்களின் சுமைையை  குறைக்க இந்த ஏற்பாடு,   நீரிழிவு,  ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து அதிக அளவு மருந்து வாங்க வேண்டி உள்ளதால் அந்த செலவை குறைக்க திட்டமிட்டோம். அதன் விளைவுதான் இந்த மருந்து கடை திறப்பு

இந்த மருந்ததகங்கள் திறப்பதற்கு  மானியம், கடனுதவி வழங்கி உள்ளோம்.  டி பார்ம், பி பார்ம்  படித்தவர்கள், அவர்கள் ஒப்புதல் பெற்றவர்கள்  மூலம் இதனை தொடங்கி உள்ளோம்.  தமிழ்நாடு மருந்து கழகம் சார்பில் மருந்து கிடங்குகள  மாவட்டம்தோறும் தொடங்கி உள்ளோம். குளிர்பதன வசதியுடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.  இந்த மருந்தகங்களுக்கு  மருந்துகள்வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தொழில் முனைவோருக்கு 3 கட்ட பயிற்சியும் வழங்கப்பட்டது.  25 சதவீத தள்ளுபடி  கொடுக்கிறோம்.  மருந்து குறைந்த வலையில்  வாங்கி  பயனடைய முடியும், கூட்டுறவு அமைச்சர்  மற்றம் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இது உயிர்காக்கும் பணி, இதனால்  பாராட்டுகிறேன்.

திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்கள் தீட்டும் அரசு, கோவிட் பெருந்தொற்றை  முகாம்கள் தடுத்து நிறுத்தினோம்.

திருச்சியில் நடந்த  கூட்டத்தில்  மக்களைத்தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. 2 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த திட்டம் மூலம்   பயன்பெற்றுள்ளனர்.  இதனால் தான் தமிழகம் முன்னோடி மாநிலமாக வளர்ந்து  வருகிறது.  நாட்டுக்கே  முன்னோடியான பல திட்டங்களை  இக்கட்டான நிதி நெருக்கடியிலும் செய்து வருகிறோம்.  தமிழ்நாட்டிற்க  மத்திய அரசு நிதி  வழங்க மறுத்தாலும்,  நெருக்கடியிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து திட்டங்களை செயல்படுத்துகிறோம். மக்களுக்கு  செய்வதில்நாங்கள்  கணக்கு பார்ப்பதில்லை.

இன்னும் சிறப்பாக இதனை செயல்படுத்த அதிகாரிகள் உறுதி ஏற்க வேண்டும். இந்த மருந்தகங்கள் அதிகரிக்கப்படும். இது போன்ற  திட்டங்களால் இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக  உருவாகிறார்கள். இந்த திட்டங்களால் தமிழ்நாடு மேலும் வளரும்.  மக்களின் தனித்தனி  தேவைகளை உணர்ந்து செயல்படுகிறோம்.

இவ்வாறு  முதல்வர் பேசினார்.

 

error: Content is protected !!