Skip to content

பல்கலை வேந்தர் பதவி: வெற்றி பெறும்வரை சட்டப்போராட்டம்- முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Authour

காரைக்குடி  அழகப்பா  பல்கலைக்கழகத்தில் இன்று  லட்சுமி  வளர்தமிழ் நூலகம்,  முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் ஏற்பாட்டில்  தனது  தாயார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.  அதன் திறப்பு விழா மற்றும் அய்யன்  திருவள்ளுவர் நூலக திறப்பு விழா இன்று நடந்தது. இவற்றை    முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.  ப. சிதம்பரம் அறிமுக உரையாற்றினார்.   உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி செழியன், கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றினdர்.

விழாவில்  முதல்வர்   கலைஞர் நூற்றாண்டு தேசிய கருத்தரங்கு நுூல் மற்றும்,  முதல்வர் குறித்த பிள்ளைத்தமிழ் நூல்களை வெளியிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின்   பேசியதாவது:

இந்த  பல்கலைக்கழத்தை தொடங்கிய  அழகப்பரை,  சோசலிச முதலாளி  என இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் கூறினார்கள்.  பின்தங்கிய  பகுதிகளில்  வசதி படைத்தவர்கள் கல்வி நிலையங்கள் திறக்க வேண்டும் என லட்சுமணசாமி முதலியார் அவர்கள் கூறியபோது உடனடியாக அதற்கு  ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்தவர் அழகப்பர்.

இங்கு நூலகத்துடன், வள்ளுவர் சிலையையும  திறந்து வைத்து உள்ளேன்.  வள்ளுவர்,  வள்ளலாரை கபளீகர் செய்ய   ஒரு கூட்டம் சதி செய்கிறது.  தமிழ் மண்ணில் சமத்துவம் பேசியவரை களவாட ஒரு கூட்டம் சதி செய்வதை  தடுக்கும் அரணாக  தமிழர்கள் இருக்க வேண்டும்.

வசதி படைத்தவர்கள் தங்கள் ஊர்களில்  நூலகம் ஏற்படுத்த வேண்டும்.  அவரவர் வசதிக்கு ஏற்பட நூலகங்களை அமையுங்கள். இந்த நூலகத்தை அமைத்தை ப. சிதம்பரத்தை பாராட்டுகிறேன்.

சென்னையில் உள்ள   அண்ணா நூலகம், மதுரையில்உள்ள கலைஞர் நூலகம்,  திருச்சி , கோவையில்  அமைய உள்ள நூலகங்கள் தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கும்.  நான் முதல்வராக பொறுப்பு ஏற்றபின், மாலை, சால்வைகள் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக  நூல்கள் வாங்குகிறேன்.   அதன் மூலம் இதுவரை  2லட்சம் நூல்கள்  சேர்ந்துள்ளது.

அதில் 1000 நூல்களை இந்த நூலகத்துக்கு  முதல்கட்டமாக அனுப்பி வைக்கிறேன்.  நூலகங்கள், கல்வி தான் தமிழ் நாட்டை  வளப்படுத்தும், பெருமைப்படுத்தும்.  கல்வி தான் திருட முடியாத சொத்து.  நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 32 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கி உள்ளோம்.

தமிழ்நாட்டில் தான் அரசு  பல்கலைக்கழகங்கள்,   மருத்து கல்லூரிகள் அதிகமாக உள்ளது.  இந்தியாவில் உள்ள சிறந்த உயா் கல்வி  நிலையங்கள்  அதிகம் தமிழ் நாட்டில் தான் உள்ளது.  தேசிய சராசரியை விட தமிழ்நாடு உயர்கல்வியில் 2 மடங்கு அதிகம் உள்ளது.

இந்த கல்வி நிலையங்களை நாம் கட்டமைக்கிறோம். அடிப்படை வசதிகளை செய்கிறோம். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுகிறோம்.  கல்வி வளர்ச்சிக்கு பார்த்து பார்த்து திட்டங்கள் தீட்டுகிறோம். ஆனால் வேந்தராக இன்னொருவர் இருப்பாராம்.    துணைவேந்தர்களை  அவர்களே நியமிப்பார்களாம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும்.  வேந்தராக முதல்வர் தான் இருக்க வேண்டும்.  இதற்காக  சட்டப்போராட்டம் நடத்துகிறோம்.  அது வெற்றி பெறும்வரை போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.