திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் 100 வினாடி வினா போட்டி நடந்தது. வினாடி வினா போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று சென்னையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின், வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பாசத்தை பொழியும்போது கனிமொழியாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி நாடாளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகவும் தங்கை கனிமொழி இருக்கிறார் என்று கலைஞர் நூற்றாண்டு வினாடி வினா இறுதிப் போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் இருக்கும் பலகோடி மக்களுக்கு Life கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் Live-ஆக இருக்கிறார்
தமிழ்நாடும் தமிழ்நாடு மக்களும் கலைஞரை ஆயிரம் ஆண்டுகள் போற்றுவர். அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களை இயற்றியவர் கலைஞர். 14 மாதங்களாக திராவிட இயக்க வரலாறு இளம் தலைமுறையினர் நெஞ்சில் விதைக்கப்பட்டுள்ளது.