நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு இன்று சில இடங்களில் மழையின் வேகம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் நேற்று இரவு முதல் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலையம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அங்கு 4 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்பதால் பஸ் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்று கோவையில் அரசு விழாவுக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் விழா முடிந்ததும் அங்கிருந்தவாறு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட கலெக்டர்களையும் காணொளியில் அழைத்து வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அனைத்து மக்களையும் பாதுகாக்க மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்துங்கள் என அப்போது முதல்வர் அறிவுரை வழங்கினார்.