Skip to content

முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு ரூ.60 ஆயிரம் வழங்கிய அமைச்சர் மகேஷ்….

தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு 60,000 க்காண காசோலையை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.  இந்த மாதம் 8-ம் தேதி இரவு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சி வந்திருந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்திற்கு வெளியே பொதுமக்கள் பகுதியில் நின்று கொண்டு இருந்த சிறுமி காவியா ஸ்டாலின் அங்கிள் என்னை படிக்க வையுங்கள் என்று சத்தமாக கோரிக்கை வைத்தார்.இதனைக் கேட்ட முதல்வர் சிறுமியின் கோரிக்கையை கேட்டு

நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுமி காவியாவின் தாயிடம் ரூபாய் 60,000 காண காசோலையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வழங்கினார். மேலும் கோவை மாவட்டத்தில் இவர்கள் தங்குவதற்கு வீடும், அரசு வேலையும் தர கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *