சென்னையில் இன்று ஜெயலலிதா இசைப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பழம்பெரும் பாடகி பி. சுசீலாவுக்கு பல்கலைக்கழக வேந்தரான முதல்வர் மு.க. ஸ்டாலின், முனைவர் பட்டம் வழங்கி பேசினார். அப்போது பி. சுசீலாவின் குரலுக்கு மயங்காதவர்கள் இந்தியாவில் இல்லை. அதில் நானும் ஒருவன். நான் மேடைக்கு வந்ததும் அம்மையாரை பார்த்து, அம்மா நானும் உங்கள் ரசிகன் என்று சொன்னேன். நான் காரில் பயணம் செய்யும்போது பி. சுசீலா அவர்களின் பாடலை கேட்டுக்கொண்டு தான் செல்வேன். எனக்கு பிடித்த அவருடைய பாடல் என, 1962ல் வெளியான தெய்வத்தின் தெய்வம் என்ற படத்தில் இடம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் எழுதிய ,
‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை’ என்று ராகத்தோடு அவர் பாடியதை அனைவரும் கேட்டு கைதட்டி ரசித்தனர்.