Skip to content
Home » நாளை சிங்கப்பூர் பயணம்…. முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயண விவரம்

நாளை சிங்கப்பூர் பயணம்…. முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயண விவரம்

2024 ஜனவரி 10  மற்றும் 11 ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு  சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த  நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நாளை  சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

24 ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிங்கப்பூர் – இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 350 வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு அரசு – சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழல் குறித்த களத் தகவல்களைப் பெற ஆர்வமுள்ள சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு அங்கு நடைபெறும் மாநாடு துணைபுரியும்.

அங்கிருந்த 26 ம் தேதி ஜப்பான் செல்லும் முதலமைச்சர் 31 ம் தேதி வரை அங்கு தங்குகிறார். ஒசாகா, டோக்கியோ நகரங்களில் ஜப்பானிய முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஜப்பானில் வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பாக நடைபெறும் நிகழ்வுகளில்  முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது அரசு அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!