தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் . கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் . எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அரசு துறைச் செயலாளர்கள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர். ஜானி டாம் வர்கீஸ், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சாருஸ்ரீ , தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், , மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் . ஏ.பி. மகாபாரதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும் அரசு பணிகளின் தற்போதைய நிலை குறித்து இதில் விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது.