திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்து திருவாரூர்சென்றார்.
அங்கு இரண்டு நாள் பயணத்தை முடித்து விட்டு இன்றுமதியம் கார் மூலம் திருச்சி விமான
நிலையம் வந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவரை கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
முதலமைச்சரின் வருகையை ஒட்டி விமான நிலையம் மற்றும் விமான நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.