திமுக பிரமுகர், மறைந்த கி. வேணு இல்ல திருமணம் சென்னையில் இன்று நடந்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:
மக்களால் போற்றக்கூடிய ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பொறாமையால் எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துக்களை கூறிவருகிறார். அவர் இப்போது ஜோதிடராக மாறிவிட்டார். விரக்தியின் எலலைக்கே சென்று எடப்பாடி பேசுகிறார். தன்னுடைய கட்சியை பற்றி கவலைப்படாமல், பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பார்களே அதுபோல திமுகவைபற்றி தான் பேசுகிறார்.
திமுக கூட்டணி தேர்தலுக்கானது அல்ல, கொள்கைக்கான கூட்டணி, திமுக கூட்டணியில் விவாதம் இருக்கலாம். ஆனால் விரிசல் ஏற்படாது. சென்னையில் மழை வந்ததும் நாங்கள் களத்தில் நின்றோம். சென்னையில் மழை வந்ததும் சேலத்தில் போய் பதுங்கியவர் தான் எடப்பாடி. எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி. 2026 தேர்தல் மட்டுமல்ல, அதைத்தொடர்ந்து வரும் எந்த தேர்தலிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ்க. மணமகன் பெயர் என்னுடைய பெயர், ரஷ் அ திபர் பெயர் ஸ்டாலின். அந்த பெயரைத்தான் எனக்கு தலைவர் வைத்தார். மணமகள் பெயர் யுவஸ்ரீ. அதைப்பற்றி கவலையில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுங்கள். புரட்சி கவிஞர் கூறியது போல மணமக்கள் வீட்டுக்கு விளக்காய் வாழுங்கள். நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.