தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்புத் துறையில் புதுமை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.