Skip to content

மு.க. ஸ்டாலின் உழைப்புக்கு அங்கீகாரமே சி.எம் பதவி…. நடிகர் ரஜினி புகழாரம்..

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் இருக்க கூடிய ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பு புகைப்பட காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புகைப்பட கண்காட்சியை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த பார்வையிட்டு வருகிறார். குறிபாக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை பயணத்தை தற்போது இருக்க கூடிய இளைய தலைமுறை முதல் அனைவரும் தெரிந்துகொள்ளும் அடிப்படியில் தான் இந்த புகைப்பட கண்காட்சி என்பது அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முதலமைச்சர் அவர்களின் இளம் வயது புகைப்படம் தொடங்கி திமுக உறுப்பினராக இருந்ததும் அதே போன்று இளைஞர் அணி செயலாளர் செயலளாராக பதவியேற்றபோது மற்றும் அவர் பங்கேற்ற போராட்டங்கள் மிசா காலங்களில் சந்தித்த நெருங்கடிகள் மற்றும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரச்சனைகள் மற்றும் அதன் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற வரைக்கும் பல்வேறு முக்கிய  நிகழ்வுகளுடைய புகைப்படங்கள் தான் இந்த புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. பலரும் பார்த்தீடாத புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருப்பது தான் இதன் சிறப்பு அம்சமாகும்.

கடந்த 28-ம் தேதி தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் அனைவரும் பார்வையிடும் வகையில் இலவச அனுமதியுடன் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த புகைப்பட கண்காட்சியை பல்வேறு முக்கிய பிரமுகர்களும் தொடர்ச்சியாக நேரில் வந்து பார்த்து ரசித்து வருகிறார்கள். திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் நேரில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த புகைப்பட கண்காட்சியை ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டு வருகிறார். அவருடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடிகர் யோகிபாபு, ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்.

 ரஜினி பேட்டியில் கூறியதாவது….. மு.க. ஸ்டாலின் உழைப்புக்கு மக்கள் அவருக்கு கொடுத்த அங்கீகாரமே முதலமைச்சர் பதவி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். முதல்வரின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டுமே ஒன்றுதான். முதல்வர் ஸ்டாலின் பல்வேறு பதவிகள் வகித்து கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சி முக அற்புதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!