தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் கே. என். நேரு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் கார் மூலம் திருவாரூர் செல்கிறார்.
வழியில் தஞ்சையில் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா இல்லத்துக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் திருவாரூர் செல்கிறார். அங்கு காட்டூரில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி அருங்காட்சியக பணிகளை பார்வையிடுகிறார்.
இரவில் திருவாரூரில் தங்கும் முதல்வர் 22ம் தேதி(புதன்) திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முன்னதாக அன்று காலை 10 மணிக்கு மன்னார்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தலையாமங்கலம் பாலு மகள் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார். கள ஆய்வு பணிகளையும் மேற்கொள்கிறார்.