சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். . இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்டா மற்றும் வட மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், 14 மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தி்னார்.
வரும் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் துறை வாரியாக புதிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதுகுறித்தும் முதல்-அமைச்சர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வரும் மிக முக்கியமான பணிகள் குறித்தும் மாவட்டங்கள் வாரியாக அரசு திட்டங்களின் நிலை குறித்தும் ஆலோசனையில் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: போதை பொருள் நடமாட்டத்தை அடியோடு ஒழித்தாக வேண்டும். போதை பொருள் என்பது சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு மட்டுமல்ல, ஒழுக்க குறைவுக்கும் காரணமாக அமைகிறது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ-1000 வழங்குவது போல விரைவில் மாணவர்களுக்கு தமிழ்ச்செல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்படும். அவ்வாறு அவர்பேசினார்.