Skip to content
Home » சமூக நல்லிணக்கம் தழைக்கட்டும்- முதல்வா் புத்தாண்டு வாழ்த்து

சமூக நல்லிணக்கம் தழைக்கட்டும்- முதல்வா் புத்தாண்டு வாழ்த்து

பரபரப்பு நிறைந்த 2024 ம் ஆண்டு இன்னும் சில மணி நேரங்களில் விடை பெறப்போகிறது. அதைத்தொடர்ந்து 2025ம் ஆண்டு  பிறக்கிறது.  புத்தாண்டு பிறப்பையொட்டி  தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:

2024ம் ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் தொடர் சாதனை பயணம் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி காட்டியுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்ட 2024 நிறைவுற்று 2025 புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.