தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.4.2023) தலைமைச் செயலகத்தில், 2022-23ஆம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 பயனாளிகளுக்கு பரிசுத்தொகையாக 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை ஆணையர் த.பொ. ராஜேஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.