தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை ச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் ஆகியோர் சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிக்களுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்.
மேலும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான கொங்கு ஈஸ்வரன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல்
நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.