தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி டில்லி செல்கிறார். 25ம் தேதி அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவது குறித்து கோாிக்கை வைக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் மக்களவை எதிர்க்கட்சித்லைவர் ராகுலை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன் காலமான மார்க்சிய கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இல்லத்துக்கும் சென்று துக்கம் விசாரித்து விட்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தவும் முதல்வர் திட்டமிட்டு உள்ளார்.