கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் தற்போது முதல் அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நாகர்கோவில் சென்றுள்ள முதல்வர், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் 14 அடி உயர கருணாநிதி சிலையையும் முதல் அமைச்சர் திறந்துவைத்தார்.
பின்னர் ஆரல்வாய்மொழியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். அங்கு நடைபெறும் பணிகள் குறித்து வட மாநில தொழிலாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.மேலும் வதந்தி குறித்து கவலைப்பட வேண்டாம் என வட மாநில தொழிலாளர்களுக்கு முதல் அமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் வட மாநில தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.