Skip to content

கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் விசாரிப்பேன்…. முதல்வர் கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா  செல்கிறார்.  தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர்  இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும்.கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய உங்களில் ஒருவனாக பயணிக்கிறேன். பயணத்தின் நோக்கம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பல தலைமுறைகளுக்கு பயன் தர வேண்டும் என்பதேயாகும். விமர்சனம் விவாதம் செய்வோருக்கு நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்,

முதல்வர் இன்று இரவு வெளிநாடு பயணம் மேற்கொள்வதையொட்டி இன்று மதியம் அவர்  அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!