தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சுவாமிமலை பேரூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் சுவாமிமலை தபால் நிலையத்தில் தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையர், தலைவர் அவர்களுக்கும் 5
பதிவு தபாலும், 600 க்கும் மேற்பட்ட சாதாரண தபால்கள் மூலம் கோரிக்கை அனுப்பி வைக்கப் பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய நிலையில் வன்னியர்கள் வாழ்ந்து வருகின்றனர். 1987 ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா தலைமையில் நடந்த மிகப்பெரிய சமூக நீதிப் போராட்டத்தில் 21 உயிர்களை தியாகம் செய்து இலட்சக்கணக்கானோர் சிறைக்குச் சென்று, பெற்றது தான் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின்(எம்.பி.சி) 20% இட ஒதுக்கீடு. இதில் உயிர் தியாகம் செய்தவர்கள் அனைவரும் வன்னியர்கள். சிறை சென்று வதைப் பட்டவரும் வன்னியர்கள் ஆகும். ஆனால் இன்று 20% எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு கிடைப்பது வெறும் மூன்று முதல் நான்கு விழுக்காடு மட்டுமே.
2020- 2021 இல் மீண்டும் நாங்கள் போராடி பெற்றது 10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு ஆகும்.
இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் பின்னர் உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தது. அவ்வாறான தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் எங்களுக்கான உரிமையை வழங்க காலதாமதம் செய்வது எந்த வகையில் நியாயம்,
இது எங்களின் உரிமை போராட்டம். கடந்த கல்வியாண்டிலேயே வன்னியர்கள் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. 2023 – 24 ஆம் கல்வி ஆண்டிலாவது எங்களின் நியாயமான கோரிக்கையான 10.5% இட ஒதுக்கீடு கிடைக்க, வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே 31ம் தேதிக்குள் நிறைவேற்றி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ். வி சங்கர். மாநில செயற் குழு உறுப்பினர் ரவீந்திரன், மாநில பொதுக் குழு உறுப்பினர் முருகன், தஞ்சை வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் மா. செல்வகுமார், மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் சிற்பி பழனிச்சாமி,
மகளிர் அணி பொறுப்பாளர் பிரியா, மற்றும் பேரூர் பொறுப்பாளர்கள் சந்தானம், ராஜதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.