தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 11 மணிக்க கோவை வந்தார். விமான நிலையத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வருக்கு பாரம்பரிய நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகள், கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர் வேனில் ஏறி அமர்ந்தார். முதல்வரை வரவேற்க விமான நிலையத்தில் இருந்து முதல்வரின் முதல் நிகழ்ச்சி நடைபெறும் விளாங்குறிச்சி வரை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு இருந்தனர். விடுமுறை அல்லாத வேலை நாளாக இருந்த போதிலும் இளைஞர்கள், பெண்கள் என மக்கள் கடலென திரண்டிருந்து முதல்வர் பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அனைவரும் முதல்வர் வருவதை செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். வழி நெடுகிலும் மேளதாளங்கள், முரசங்கள் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தனர். இந்த கூட்ட
நெரிசலிலும் பலர் முதல்வரின் வேன் அருகே சென்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அவற்றையும் முதல்வர் பெற்றுக்கொண்டார்.
விழா நடைபெறும் விளாங்குறிச்சி வரையிலான 4 கி.மீ. தூரமும் சாலையின் இருபுறமும் மக்கள் கடலென திரண்டிருந்தனர். அவர்களின் முதல்வரின் உருவம் இடம்பெற்ற பதாகைகள், இருவண்ண கொடிகள், பலூன்கள் வைத்திருந்தனர். முதல்வரின் வாகனம் தங்கள் அருகே வரும்போது முதல்வரை பார்த்து கரங்களை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.
மக்களவை தேர்தல் நேரத்தில் முதல்வர் வந்தபோது திரண்ட கூட்டத்தை விட இப்போது பல மடங்கில் பல்லாயிரகணக்கான மக்கள் திரண்டிருந்தனர். கடல் காணா கோவை இன்று மக்கள் கடலை பார்த்தது என்று பாராட்டும் வகையில் மக்கள் கடலென திரண்டிருந்தனர். கோவை வரலாற்றில் இதுபோன்று ஒரு தலைவரை வரவேற்க மக்கள் திரண்டதில்லை என மக்கள் மெய்சிலித்தனர். பெரும்பாலான பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்து முதல்வரை வரவேற்றனர். 11 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர் 4 கி.மீ. தூரத்தை கடக்க சுமார் 1 மணி நேரத்திற்கு மேலானது. அந்த அளவு மக்கள் கடலில் அவர் நீந்தி வநதார்.
விளாங்குறிச்சியில் விழா மேடைக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து விழா ஏற்பாடுகளை பார்த்து பாராட்டினார்.